pathanir sadham - 2026

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பதநீர் சாதம்!

லைஃப் ஸ்டைல் சமையல் புதிது
pathanir sadham - 2026

பதநீர் சாதம்
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 200 மில்லி
பதநீர் – 800 மில்லி
நெய் – 3 மேசைக்கரண்டி
தேங்காய் – ஒரு மூடி
முந்திரிப்பருப்பு – ஒரு மேசைக்கரண்டி
கிஸ்மிஸ்பழம் – 10

செய்முறை
ஒரு பாத்திரத்தில் பதநீரை ஊற்றி சுடவைத்துக் கொள்ளவும்.
பிறகு அரிசியை சுத்தம் செய்து அதில் போட்டு சிறு தணலில் பொங்கல் போல் குழைவாக வேக விடவும்.
நன்றாகக் குழைந்த பிறகு கரண்டியால் நன்றாகக் கடைந்து விடவும்.
வாணலியில் நெய் ஊற்றி முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் பழத்தை வறுத்து சாதத்தில் கலந்து தேங்காய் துருவலும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
பதனீர் இனிப்பாக இருந்தால்தான் சாதமும் இனிப்பாக இருக்கும். இல்லையெனில், தேவையான சீனி சேர்த்து கிளறி இறக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.