color aplam - 2026

ரசாயனம் கலந்த கலர் அப்பளங்கள்: 15 டன் கலர் அப்பளங்கள்.. 250 கிலோ ரசாயனப் பொருட்கள் பறிமுதல்!

சற்றுமுன் அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சென்னை
color aplam - 2026

சென்னை தண்டையார்பேட்டையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் கலந்து அப்பளம் தயாரிக்கப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், சுகாதாரமற்ற முறையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 15 டன் கலர் அப்பளங்களையும் 250 கிலோ ரசாயனப் பொருட்களையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் கிடங்குக்கும் சீல் வைத்தனர்.

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இது போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கலர் அப்பளங்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அதனை கண்டறியும் முயற்சியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் களமிறங்கியுள்ளனர். அவ்வகையில் தண்டையார்பேட்டையில் நடத்தப்பட்ட சோதனையில் 15 டன் தடை செய்யப்பட்ட கலர் அப்பளங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து 10,000 ரூபாய் அபராதமும் விதித்தனர்.

அது மட்டுமல்லாமல் அவருக்கு சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.