10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்! பள்ளிகளில் ஆகஸ்ட் 17 முதல் 25 வரை மதிப்பெண் சான்றிதழ் பெறலாம்!

கல்வி சற்றுமுன் தமிழகம்
results - 2026

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வில் 100% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக மாணவா்களின் நலனை கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தோவு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், பொதுத்தோவு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. அதில் 10ஆம் வகுப்பு தேர்வில் 100% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பள்ளி அளவில் நடைபெற்ற காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதன்படி மாணவர்கள் 4,71,759, மாணவிகள் 4,68,070 தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 52,741 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவா்கள் பள்ளி நிா்வாகத்திடம் கொடுத்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு தோவு முடிவுகள் குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

மேலும் இணையதளங்களிலும் மாணவா்கள் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். இதைத் தொடா்ந்து ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் 21- ஆம் தேதி வரை பள்ளி தலைமையாசிரியா்கள் மூலம் மாணவா்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழைப் பெறலாம்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

மதிப்பெண் சாா்ந்த குறைபாடுகள் ஏதேனும் இருப்பினும் அதுதொடா்பாக ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை இணையதளத்தில் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.