அமராவதி மண்ணை விழுந்து வணங்கிய சந்திரபாபு நாயுடு!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
chandrababu amaravathi - 2026

தெலுகு தேசம் கட்சி தலைவர் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வியாழக்கிழமை இன்று ஆந்திரா தலைநகர் அமராவதியில் பாதயாத்திரை சென்றார். ஒய்சிபி அரசு தகர்த்தெறிந்த ‘பிரஜா வேதிக’ இருந்த இடத்தை பார்வையிட்டார்.

உத்தண்டராயுனிபாலத்தில் தலைநகருக்கு அடிக்கல் நாட்டிய இடத்தைச் சென்றடைந்த சந்திரபாபு நாயுடு, அங்கு அமராவதி மண்ணை விழுந்து வணங்கினார்.

அப்போது பேசிய அவர், தலைநகர் அமராவதியை மயானத்தோடு ஒப்பிடுவது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. ஒய்சிபி அரசு அமராவதியை அலட்சியப்படுத்துகிறது. இளைஞர்களின் எதிர்காலத்தை நாசம் செய்கிறது. ஹைதராபாத் போல் அமராவதியை முன்னேற்ற வேண்டும் என்று நினைத்தேன். ஒய்சிபி தலைவர்கள் குறுக்கிடுகிறார்கள் என்றார்.

chandrababu amaravathi1 - 2026

சந்திரபாபு நாயுடுவின் சலோ அமராவதி யாத்திரைக்கு ஒய்சிபி ஆதரவாளர்கள் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தார் கள். சந்திரபாபுவின் கான்வாய் மீது கற்களை வீசி எறிந்தார்கள்.

சந்திரபாபு நாயுடுவின் அமராவதி பயணத்தை தடுத்து நிறுத்த ஒவ்வொரு அடியிலும் முயற்சித்தார்கள். அவர் பயணித்த பஸ் மீது செருப்புகளை வீசினார்கள். சந்திரபாபு கோ பேக் என்று முழக்கமிட்டார்கள்.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!

எல்லாத் தடைகளையும் தகர்த்தெறிந்து அமராவதியில் வந்திறங்கினார் நாயுடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.