அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள் வரன்முறைப் படுத்துவதற்கான காலக்கெடு நவம்பர் 16 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள் வரன்முறைப் படுத்துவதற்கான காலக்கெடுவை நவம்பர் 16-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. www.tnlayoutreg.in என்ற இணையதளம் வாயிலாக நவம்பர் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை 5 நாட்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த 3ம் தேதியுடன் இதற்கான காலக்கெடு முடிவடைந்திருந்தது. காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று பலர் மனு அளித்திருந்த நிலையில், காலக்கெடு வரும் 16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.




