திண்டுக்கல் மாவட்டத்தில், நிறை மாத கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது, 108 ஆம்புலன்ஸில் பாதி வழியிலேயே சுகப் பிரசவம் நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் விருதலை பட்டியை சேர்ந்த முருகேஸ்வரி என்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதை அடுத்து, வேடசந்தூரில் இருந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் முருகேஸ்வரியை அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனைக்குச் செல்லும் போது பாதி வழியிலேயே பனிக்குடம் உடைந்து பிரசவம் ஆனது. இதில் அந்தப் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் பூரண நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.




