Sinar Corps Instagram - 2026

மீண்டும் செயல்பட்ட சினார் கார்ப்ஸ் இன்ஸ்டாகிராம்!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
Sinar Corps Instagram - 2026

இந்திய இராணுவத்தின் சினார் கார்ப்ஸ் படைப்பிரிவின் இன்ஸ்டாகிராம் கணக்கு ஒரு வாரத்திற்கு பிறகு செயல்பாட்டுக்கு வந்தது.

இந்திய இராணுவத்தின் சினார் கார்ப்ஸ் படைப்பிரிவின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் கடந்த ஒரு வாரமாக முடக்கப்பட்டு இருந்தது.

இந்திய ராணுவத்தின் சினார் கார்ப்ஸின் இன்ஸ்டாகிராம் கணக்கு கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு முடக்கப்பட்ட பிறகு நேற்று மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.

ஜனவரி 28 முதல் சீனார் கார்ப்ஸின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

அதற்கான காரணம் எதுவும் வழங்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சினார் கார்ப்ஸின் பேஸ்புக் கணக்கும் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜம்மு காஷ்மீரின் உண்மையான கள நிலவரத்தை வெளியிடுவதற்காக சினார் கார்ப்ஸ் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.