உலகிலேயே பொருளாதார வளர்ச்சியில் அதிக வேகத்தில் இந்தியா: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்!

Published:

rbi - 2026

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுக கால கடன்களுக்கு வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என அறிவித்துள்ளார்.

குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) 4% ஆக தொடரும் என்றும் கூறியுள்ளார்.

பணப்புழக்கத்தை தற்போதைய நிலையிலேயே வைத்திருக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

அதேபோல், ரிசர்வ் வங்கியில், வங்கிகள் செய்யும் டெபாசிட்டுக்கான வட்டி விகிதமும் (ரிவர்ஸ் ரெப்போ) 3.35% ஆகவே தொடரும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், வீடு, கடன்களுக்கான வட்டி விகிதம் அதே நிலையிலேயே இருக்கும் என்றும் மும்பையில் வல்லுநர்கள் குழு ஆலோசனை நடத்திய பிறகு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் இதனை தெரிவித்துள்ளார்.

2021-22 நிதியாண்டில் CPI பணவீக்கம் 5.3% ஆகவும், 2022-23 நிதியாண்டில் 4.5% ஆகவும் உள்ளது.

உணவு பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச நிதியத்தின் (IMF) கணிப்பின்படி உலகிலேயே அதிக வேகத்தில் வளரும் பொருளாதாரம் இந்தியாதான்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

2022-23-ல் பொருளாதார வளர்ச்சி 7.8% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என்றும் பொருளாதார ஆய்வறிக்கையில் வளர்ச்சி விகிதம் 8 முதல் 8.5% இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

Related articles

Recent articles

spot_img