போராட்டத்தால் பீகாரில் 2 வயது குழந்தை உயிரிழப்பு: ராகுல் பொறுப்பு ஏற்பாரா?

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

ravi sankar prasad e1536641421908 - 2026

எதிர்க்கட்சியினரின் போராட்டத்தால் பீகாரில் உயிரிழந்த 2 வயது குழந்தை  மரணத்திற்கு ராகுல் பொறுப்பு ஏற்பாரா? என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.  |

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற எதிர்க்கட்சியினரின் போராட்டத்தால், பீகாரில் 2 வயது குழந்தை உயிரிழந்தது. இதற்கு ராகுல்காந்தி பதிலளிப்பாரா என்று கேட்டுள்ளார் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.

பீகார் மாநிலம் ஜகனாபாத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட 2 வயது பெண் குழந்தையை ஆட்டோவில் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போது போராட்டக்காரர்கள் வழி மறித்ததுள்ளனர்.  இதனால் மருத்துவமனைக்குச் செல்லும் முன்பே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதனை கண்ணீர் மல்க அக்குழந்தையின் தந்தை கூறியுள்ளார்.

இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்ட மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அந்தக் குழந்தையின் மரணத்திற்கு ராகுல் காந்தி பொறுப்பு ஏற்பாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.