ipl 2022 - 2026

IPL 2022: கம்மின்ஸ் அடித்த அதிவேக அரைசதம்!

விளையாட்டு
ipl 2022 - 2026

மும்பை vs கொல்கொத்தா
கம்மின்ஸ் அடித்த அதிவேக அரைசதம்

  • K.V. பாலசுப்பிரமணியன்

நேற்று, ஏப்ரல் ஆறாம் நாள் மும்பை, கொல்கொத்தா அணிகளுக்கிடையே புனேயின் கிரிக்கெட் மைதானத்தில், ஐ.பி.எல்லின் 14ஆவது போட்டி நடந்தது. இப்போட்டியில் கொல்கொத்தா அணி 16 ஓவரில் 162 ரன் அடித்து மும்பை அணியை வென்றது.

டேனியல் சாம்ஸின் 16ஆவது ஓவரில் கம்மின்ஸ் 35 ரன்கள் எடுத்தார். இதனால் ஐந்து முறை சாம்பியன்களான மும்பை அணி தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியடைந்தனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 விக்கெட்டுக்கு 162 (கம்மின்ஸ் 56*, வி ஐயர் 50*, எம் அஷ்வின் 2-25, மில்ஸ் 2-38) மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட்டுக்கு 161 (சூர்யகுமார் 52*, வர்மா 38, கம்மின்ஸ் 2-49) 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

முன்னதாக சூர்யகுமார் யாதவின் 360 டிகிரி ஆட்டம் சிலிர்ப்பை அளித்தது, டெவால்ட் ப்ரீவிஸ் தனது அச்சமற்ற தன்மையை வெளிப்படுத்தினார், மேலும் திலக் வர்மா அவர் ஏன் ஒரு சிறந்த பேட்டர் என்பதை வெளிப்படுத்தினார்.

கொல்கொத்தா அணி ஒரு கட்டம் வரை உற்சாகமான தற்காப்பு ஆட்டம் ஆடியது. இதில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய மும்பை, போட்டியை வெல்லலாம் என்ற கனவில் இருந்திருக்கும். ஆனால் பாட் கம்மின்ஸ் 14 பந்துகளில், அடித்த அதிவேக அரை சதத்தால் கொல்கொத்தா வெற்றி பெற்றது.

நைட் ரைடர்ஸ் அணிக்கு 41 பந்துகளில் 61 ரன்கள் தேவை என்ற நிலையில் 14வது ஓவரில் கம்மின்ஸ் மற்றும் வெங்கடேஷ் ஜோடி சேர்ந்தனர். டைமல் மில்ஸ் ஷார்ட் பந்தில் ஆண்ட்ரே ரசல் அவுட்டானார், ஜஸ்பிரித் பும்ராவுக்கு இரண்டு ஓவர்கள் மீதம் இருந்தன. மீதமிருந்த கொல்கொத்தா பேட்டர்கள் அதிரடி ஆட்டக்காரர்கள் அல்ல. இது ஒரு சில அணிகளுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

கம்மின்ஸ் அவர் எதிர்கொண்ட இரண்டாவது பந்தை டீப்-பேக்வர்ட் ஸ்கொயர் லெக்கில் சிக்ஸருக்கு அடித்தார், மூன்றாவது பந்தை பேக்வர்ட் பாயிண்ட் மற்றும் ஷார்ட் தேர்ட் இடையே ஃபோர் அடித்தார், மேலும் பும்ராவை அவரது ஆறாவது பந்தில் டீப் மிட்விக்கெட்டில் டெபாசிட் செய்தார். முன்னதாக காயம் காரணமாக ஐபிஎல் 2022இல் முதன்முறையாக ஆடும் சூர்யகுமார் மெதுவாகத் தொடங்கினார், 18 பந்துகளில் தனது முதல் பவுண்டரியை அடித்தார்.

அடுத்தடுத்த பந்துகளில் சூர்யகுமார் நான்கு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களை அடித்தார். அவருக்குத் துணையாக திலக் வர்மா, அழகாக ஆடினார். போலார்டு தன் பங்கிற்கு கடைசி ஓவரில் 22 ரன்கள் எடுத்தார்.

ஐபிஎல் போட்டிகளில் கம்மின்ஸ் அடித்த 14 பந்துகளில் அரை சதம் ஒரு சாதனை. இதற்கு முன்னர் கே.எல் ராகுல் 14 பந்துகளில் 50 அடித்திருக்கிறார்.

ஆனால் டி 20 போட்டிகளில் 12 பந்துகளில் 50 அடித்து யுவராஜ் சிங் சாதனை படைத்திருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.