vaccine - 2026

கோவோவேக்ஸ் தடுப்பூசி ரூ. 900-ல் இருந்து ரூ. 225 ஆக விலை குறைப்பு!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
vaccine - 2026

இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, கடந்த ஆண்டு டிசம்பர் 28 அன்று பெரியவர்களுக்கும் கோவோவேக்ஸ் தடுப்பூசியை அங்கீகரித்தது.

இதே போல் 12-17 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கும், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, கடந்த மார்ச் 9 அன்று, அவசரகால பயன்பாட்டுக்கு கோவோவேக்ஸை அங்கீகரித்தது.

இந்நிலையில் தனியார் தடுப்பூசி மையங்களில் 12-17 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்காக CoWIN போர்ட்டலில் அதன் கோவோவாக்ஸ் (Covovax) தடுப்பூசி சேர்க்கப்பட்டது.

நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (என்.டி.ஏ.ஜி.ஐ) பரிந்துரையைத் தொடர்ந்து, தடுப்பூசி விருப்பத்தின் ஏற்பாடு திங்களன்று போர்ட்டலில் சேர்க்கப்பட்டது.

இந்த நிலையில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) தடுப்பூசியின் ஒவ்வொரு டோஸின் விலையையும் அதிரடியாக குறைத்துள்ளது..

அதன்படி தடுப்பூசியின் விலை தற்போது 900 ரூபாயில் ரூ.225-ஆக குறைக்கப்பட்டுள்ளது..

சீரம் நிறுவனத்தின் அரசு மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்களுக்கான இயக்குநர், பிரகாஷ் குமார் சிங், இதுகுறித்து பேசிய போது ” நிறுவனம் ஒவ்வொரு டோஸின் விலையையும் ரூ. 900-ல் இருந்து ரூ. 225 ஆக குறைத்துள்ளது..

இதுகுறித்து அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் மருத்துவமனையில் சேவைக் கட்டணமாக ரூ.150 வரை வசூலிக்கலாம்.” என்று தெரிவித்தார்…

தற்போது, ​​12 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு Biological E’s Corbevax தடுப்பூசி போடப்படுகிறது, அதே நேரத்தில் 15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு பாரத் பயோடெக்ஸ் கோவாக்சின் அரசு தடுப்பூசி மையங்களில் இலவசமாக வழங்கப்படுகிறது.

தனியார் மையங்களில் ஜிஎஸ்டி உட்பட கோவாக்ஸின் டோஸ் ரூ.386 ஆகவும், கார்பேவாக்ஸ் ரூ.990 ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.