samayam tamil 2 - 2026

மேட்டூர் காவிரியில் செத்து மிதக்கும் மீன்கள்..

சற்றுமுன்

மேட்டூர் காவிரியில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்களால் சுற்று பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

தேக்கம் 60 சதுர மைல் பரப்பளவு கொண்ட மேட்டூர்
நீர்த்தேக்கத்தில் கட்லா, ரோகு, மிர்கால், அரஞ்சான் ஆறால். கெழுத்தி கெண்டை உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட  மீன்கள் உள்ளன.
மேட்டூர் நீர் தேக்கத்தில் 2000 மீனவர்கள் உரிமம் பெற்று மீன்பிடித்து வருகின்றனர்.
மேட்டூர் மீன்கள் சுவை மிகுந்தது என்பதால் மாநில முழுவதும் மேட்டூர் மீன்களுக்கு நல்ல கிராக்கி உண்டு.

இன்று காலை டெல்டா பாசன கால்வாயில் மாதையன் குட்டை என்ற பகுதியில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் காவேரி கரையில் துர்நாற்றம் வீசுகிறது. பலவகை மீன்கள் இருந்தாலும் குறிப்பாக அரஞ்சான் மீன்கள் மட்டுமே செத்து மிதக்கின்றன.இதனால் மேட்டூர் நீர் தேக்கம் மற்றும் காவிரியில் மீன்வளம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க மீன்வளத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து செயல்பட்டு மீன்வளத்தை பாதுகாக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

samayam tamil 2 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.