images 57 2 - 2026

கேதார்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்..உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு..

இந்தியா

கனமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக கேதார்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கேதார்நாத் தாம் புனித யாத்திரை செல்பவர்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்து உள்ளது. 

12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான கேதார்நாத் கோயிலின் நுழைவுவாயில்  மே 6-ம் தேதி திறக்கப்பட்டது. திங்கள்கிழமை பெய்த கனமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக கேதார்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. 
வானிலை மேம்படும் வரை பக்தர்கள் அந்தந்த நிலையங்களிலேயே இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த மூன்று நாட்களாக கேதார்நாத்தில் உள்ள சிவன் கோயிலில் வழிபாடு செய்த பக்தர்கள், திரும்பும் பயணத்தை மேற்கொள்வதில் இருந்து தடுத்து நிறுத்தப்பட்டதாக ருத்ரபிரயாக் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இதேபோல், கௌரிகுண்டின் முகாமில் இருந்து கேதார்நாத்திற்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த மக்கள் அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். 

மேலும், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் கேதார்நாத் தாம் புனித யாத்திரை செல்பவர்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்து உள்ளது. 
இந்நிலையில், யாத்திரை செல்பவர்களில் பலர் உடல்நல குறைவு உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்து வருகின்றனர். இதில், கேதர்நாத் தாம் யாத்திரையில் மாரடைப்பு ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்து உள்ளனர் என ருத்ரபிரயாக் மாவட்ட நிர்வாகம் நேற்று தெரிவித்து இருந்தது. இதனால், மொத்த பலி எண்ணிக்கை 37 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 3ந்தேதி தொடங்கி நடந்து வரும் உத்தரகாண்டின் சார்தாம் யாத்திரையில் 57 பக்தர்கள் இதுவரை உயிரிழந்து உள்ளதாக கூறப்படுகிறது.

images 57 2 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.