images 80 - 2026

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா இன்று துவக்கம்..

சற்றுமுன்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா இன்று வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலை 5 மணிக்கு கோட்டார் இளங்கடை பட்டாரியர் சமுதாய ருத்திரவதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா அறக்கட்டளை சார்பில் கொடிப்பட்டம் விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக கன்னியாகுமரி கிறிஸ்தவ மீனவர்கள் கொடிமர கயிற்றை ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இன்று காலை பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடத்தி கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து விழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம், இரவு 9 மணிக்கு அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் ஆகியவை நடக்கிறது.

ஜூன்11-ந்தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம், பகல் 12 மணிக்கு அன்னதானம், இரவு 9 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் வீதியுலா வருதல், 12-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு, இரவு 9 மணிக்கு தெப்பத்திருவிழா, 11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

images 80 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.