FB IMG 1657975679246 - 2026

சபரிமலை கோயில் ஆடி மாத பூஜைக்காக நடைதிறப்பு..

சற்றுமுன்
FB IMG 1657975679246 - 2026

சபரிமலை ஐயப்பன் கோயிலில்
கர்கடகம் ஆடி மாத பூஜைகளுக்காக இன்று ஜூலை 16ம் தேதி மாலை 5மணிக்கு சபரிமலை நடை திறக்கப்பட்டது.இரண்டு ஆண்டு கழித்து சன்னிதானத்தில் நடை திறக்கும் போது பக்தர்களின் கூட்டம் மிக அதிக அளவில் காணப்பட்டது.

FB IMG 1657975658998 - 2026

இன்று முதல் பக்தர்களுக்கான நுழைவு அனுமதிக்கப்பட்டது.ஜூலை  21ம் தேதி இரவு நடை மூடப்படும்.ஐயனை தரிசனம் செய்ய முன்பதிவு ஆன்லைன் விர்ச்சுவல் க்யூ முறையில் துவங்கியுள்ளது.
சபரிமலை சுவாமி ஐயப்பன்
  கோவிலில் இன்று நடை திறந்ததும் தீபம் ஏற்றப்பட்டது.
அய்யப்ப பக்தர்கள் ஆன்லைன் விர்ச்சுவல் க்யூ முறையில் முன்பதிவு செய்து தரிசனம் செய்யலாம்.இதற்கு ஸ்பாட் புக்கிங் அமைப்பும் தயார் செய்யப்பட்டுள்ளது. நிலக்கல் வரும் ஐயப்ப பக்தர்கள் இம்மாதத்திற்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு  இன்று காலை 10 மணி முதல் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

FB IMG 1657975653272 - 2026

17.07.2022 காலை 5 மணிக்கு ஆடி கர்கடகம் பூஜைகள் நடத்த திருநடை திறக்கப்படுகிறது.பின் வழக்கமான அபிஷேகம், நெய் அபிஷேகம் மற்றும் இதர பூஜைகள் நடைபெறும்.
நடை திறக்கப்படும் 5 நாட்களும் புஷ்பாபிஷேகம் நடைபெறும்.பூஜைகள் முடிந்து 21ம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலை ஐயப்பன் சன்னிதி நடை அடைக்கப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.