mcms 1 - 2026

உத்தரகாண்டில் பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 10 பேர் பலி..

சற்றுமுன்
mcms 1 - 2026

உத்தரகாண்டில் இன்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பயிற்சி மலையேற்ற வீரர்கள் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் நேரு மலையேறுதல் நிறுவனம் என்ற அரசு மலையேறுதல் கல்வி பயிற்சி நிறுவனம் உள்ளது. இந்த பயிற்சி நிறுவனத்தை 34 பயிற்சி மலையேறு வீரர்கள் மற்றும் 7 பயிற்சியாளர்கள் என மொத்தம் 41 பேர் இன்று உத்தர்காசியில் உள்ள இமயமலையின் திரவுபதி கா கண்டா – 2 சிகரத்தில் இருந்து பயிற்சியை முடித்துக்கொண்டு முகாமிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது, மலைச்சிகரத்தின் 16 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து முகாமிற்கு திரும்பிக்கொண்டிருந்தபோது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் மலையேற்ற வீரர்கள் அனைவரும் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்த இந்தோ-தீபெத் எல்லைப்பாதுகாப்பு படையினர், தேசிய, மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்டும் பணியில் களமிறங்கினர். மீட்பு பணியின் போது பனிச்சரிவில் சிக்கிய பலர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

ஆனால், இந்த பனிச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 28 பேர் இன்னும் பனிச்சரிவில் சிக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பனிச்சரிவில் சிக்கிய எஞ்சியோரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

911618 fwsa - 2026
gallerye 174101492 3137669 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.