சுட்டெரிக்கும் வெய்யிலின் நடுவே… தமிழகத்தில் இன்று பரவலாக மழை!

சற்றுமுன் சென்னை தமிழகம்
rain
rain

தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்தது. சுட்டெரிக்கும் வெய்யிலின் நடுவே இதமான சூழலாக மழை பெய்தது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர், சத்தியமங்கலம், அப்பம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டையில் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. விழுப்புரத்தில் மரக்காணம், முகையூர், அரகண்டநல்லூர், மணம்பூண்டி, உளூந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. கள்ளக்குறிச்சியில் திருக்கோவிலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. திருவண்ணாமலையில் செங்கம், செய்யாறு, வலையாம்பட்டில் மழை பெய்தது. சேலத்தில் மேட்டூர், ஓமலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

வேலூர், ராணிப்பேட்டை, கோவை, ஈரோடு, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை. கோவை மேட்டுப்பாளையம் மற்றம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. ஈரோட்டில் கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.