இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய ஐ.எஸ். தீவிரவாதிகள் 4 பேர் கைது

சற்றுமுன்
 
உத்தரகாண்டில் நான்கு இளைஞர்களை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கதினருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும், ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினருடன் தொடர்புடைய இணையதளங்களுக்கு அடிக்கடி சென்று பார்வையிட்டதையடுத்து அவர்களை உளவுப்பிரிவு காவலர்கள் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இதில் சிரியாவுக்கு அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வந்ததும், வெடிகுண்டுகளை தயார் செய்வது எப்படி என இணையதளங்களில் அவர்களில் தேடியதும் தெரிய வந்தது.
 
இதையடுத்து காவல் துறையினர் நான்குபேரையும் கைது செய்தனர். இதில், அக்லாக் உர் ரகுமான் என்ற இளைஞரிடம் பதன்கோட் தாக்குதல் குறித்தும் பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும், உத்தர பிரதேச மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்று வரும் கும்பமேளா, மற்றும் ஹரித்வார் செல்லும் ரயில், டெல்லி போன்ற இடங்களில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.