மார்ச் மத்தியில் தாம்பரம் செங்கோட்டை அந்த்யோதயா எக்ஸ்பிரஸ்

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை

செங்கோட்டை:

செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க செயலாளர் மற்றும் மதுரை கோட்ட ரயில் உபயோகிப்போர் ஆலோசனை குழு உறுப்பினர்  கே.எச்.கிருஷ்ணன் இதுகுறித்து தெரிவித்தபோது…

மார்ச் இரண்டாம் வாரத்தில் தாம்பரம் செங்கோட்டை இடையே முன் பதிவு இல்லாத அந்த்யோதயா விரைவு ரயில்கள் இயக்கப்பட வுள்ளன என தெரிகிறது.

மஞ்சள் நிற வண்ணத்தில் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட ரயில் பெட்டிகள் இந்த அந்த்யோதயா ரயிலின் சிறப்பு அம்சமாகும். இதற்காக தெற்கு ரயில்வேக்கு செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது என்று  கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.