
சென்னை:
அதிமுக.,வின் துணை பொதுச் செயலாளர் என்ற வகையில், கட்சியில் களை எடுப்பதாகக் கூறிக் கொண்டு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி வருகிறார் டிடிவி தினகரன்.
அந்த வகையில், சசிகலா இருந்தபோது அவருக்கு ஆதரவாக ஊரெங்கும் சென்று பட்டி தொட்டியெல்லாம் பேசி வந்த கோகுல இந்திராவை நீக்கிய சூட்டோடு, இப்போது, பா.வளர்மதியையும் நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார் தினகரன்.
அவரது லேட்டஸ்ட் நீக்கப் பட்டியலில், அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் வளர்மதி, ரமணா, புத்திசந்திரன், சைதை துரைசாமி, நீலகிரி மா.செ அர்ஜுன் எம்.பி, மாணவரணி செயலாளர் எஸ்.ஆர் விஜயகுமார் எம்.பி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரையும் நீக்கியுள்ளதாக டிவிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.



