சசிகலா நீக்கம் பற்றி பொதுக்குழு முடிவு செய்யும்: ஜெயக்குமார்

Published:

Jayakumar Minister - 2026

சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் எம்.பி., எம்.எ.ல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டம் முடிந்ததும் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையையும், ஜெயா தொலைக்காட்சியையும் விரைவில் மீட்போம். அது தொடர்பான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இன்று முத்தான 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. டி.டி.வி.தினகரனால் நியமிக்கப்பட்ட நியமனங்களும் கட்சி பதவி தொடர்பான நீக்க அறிவிப்புகளும் செல்லாது. ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளே கட்சியை வழி நடத்துகிறார்கள். அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் எப்போது நடை பெறும் என்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும். அதில் சசிகலா நீக்கம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும். இன்றைய கூட்டத்தில் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்’ என்று கூறினார்.

Related articles

Recent articles

spot_img