Rauf - 2026

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேரள தலைவராக இருந்த ரவுஃப் கைது..

சற்றுமுன்
Rauf - 2026

இந்தியாவில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் கேரள மாநில தலைவராக இருந்த ரவுஃப் கைது செய்யப்பட்டுள்ளார். 

இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காகத் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதாகவும், வன்முறைக்குத் துணைபோவதாகவும், மதக் கலவரத்தைத் தூண்டுவதாகவும் புகாா்கள் கூறப்பட்டு வந்தன.

இதையடுத்து இந்தியா முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 9 அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் கேரளம் மாநில தலைவராக இருந்து வந்த ரவுஃப்பை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

பாலக்காடு மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த ரவுஃப்பை கைது செய்துள்ள என்ஐஏ அதிகாரிகள் கொச்சியில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.