நம் பிறப்பிற்கு ஒரு ரகசியம் இருக்கிறது. நாம் எப்படி புதிது புதிதாக பொருள்களை உற்பத்தி செய்கிறோமோ, அதை போல் காரண காரியம் இருப்பதால்தான் மனிதனை படைக்கிறான் இறைவன். நாம் ஆற்ற வேண்டிய கடமை முடிந்ததும் அழைத்து கொள்கிறான். இது இயற்கையாய் ஏற்படுவது. அதாவது வாழ்ந்து சலித்து வயோதிகம் ஏற்பட்டு மறைந்தால் கவலை இல்லை. எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி இறந்தால் கூட விதிவசம் எந்த செய்வது என்று விட்டு விடலாம். ஆனால் வாழ அனைத்து தகுதிகளும் இருப்பவர்கள் கூட, விபரீதமாக யோசித்து வாழ்க்கையை முடித்து கொள்கிறார்களே, அதை தடுத்து நிறுத்த என்ன உபாயம்? மதி என்ற ஓன்று இருக்கிறதே என்பதை சுட்டிக்காட்டுவதே என் இந்த பதிவு.
