g20 all party meeting - 2026

ஜி20 மாநாடு தொடர்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம்; பிரதமர் மோதீ தலைமையில் முதல்வர்கள் பங்கேற்பு !

இந்தியா Featured சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
g20 all party meeting - 2026

‘
ஜி -2௦’ அமைப்பின் மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி
தலைமையில் புதுடில்லியில் நேற்று (05.12.2022) நடைபெற்ற அனைத்துக் கட்சி
கூட்டத்தில், பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்றனர்.

உலகின் பெரும் பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பான, ஜி – 2௦ தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதன் மாநாடு, அடுத்தாண்டு செப்.,9 மற்றும் 1௦ல் புதுடில்லியில் நடக்க உள்ளது. இதில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பர்.

இதற்கு முன்பாக, நாடு முழுதும் 2௦௦ ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இதில் இந்த நாடுகளின் பிரதநிதிகள் பங்கேற்பர். ஜி -2௦ மாநாடு மற்றும்
முன்னேற்பாடுக் கூட்டங்களை சிறப்பாக நடத்துவது குறித்து, பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்தது.

ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்த இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங்க், மஹாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பங்கேற்றனர். புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோரும் பங்கேற்றனர்.

பா.ஜ., தலைவர் நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் பிரதமர் தேவ கவுடா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி,
இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் டி. ராஜா, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர்,
பியுஷ் கோயல் ஆகியோரும் பங்கேற்றனர். அடுத்த ஒரு ஆண்டில் நடத்தப்பட உள்ள
நிகழ்ச்சிகள் குறித்து மத்திய அரசு தரப்பில் விளக்கப்பட்டது. இதற்கு முன்னதாக, பா.ஜ.க , தேசிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

இதில், நாடு முழுதும் இருந்து நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், பேசிய பிரதமர் மோடி, ”இந்தியா, ஜி -௨௦ அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது,
ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்ப்பதாகும்,” என குறிப்பிட்டார்.

தமிழகத்துக்கும் வாராணசிக்கும் இடையே உள்ள கலாசார உறவை விளக்கும் வகையில் நடக்கும் காசி தமிழ் சங்கமம் போன்ற நிகழ்ச்சிகளை நாடு முழுதும் நடத்திட பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.