IMG 20221226 WA0060 - 2026

அம்பை அருகே மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு..

சற்றுமுன்
IMG 20221226 WA0060 - 2026

அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வனப்பகுதியிலிருந்து உணவு தேடி வந்த காட்டு யானை மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தது.

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதியில் அமைந்துள்ளது களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. மலையடிவார கிராமங்களான பொட்டல், மணிமுத்தாறு, செட்டிமேடு, வேம்பையாபுரம், பொதிகையடி, அனவன்குடியிருப்பு, பெத்தான் பிள்ளைக் குடியிருப்பு, சிவசைலம், அழகப்பபுரம், கடையம் பெரும்பத்து, திரவிய நகர், மத்தளம்பாறை உள்ளிட்ட மலையடிவார கிராம விவசாய நிலங்களில் உணவுக்காக வனப்பகுதியிலிருந்து வெளியேறும் விலங்குகள் விளைபயிர்களை சேதப்படுத்தி வருவதுண்டு.

மேலும் மழைக்காலங்களில் காட்டுக் கொசுக்களின் தாக்குதலிலிருந்து தப்புவதற்காகவும் யானை, காட்டுமாடுகள் உள்ளிட்ட விலங்குகள் மலையடிவார கிராமங்களில் நுழைவதுண்டு.இதனிடையே, திங்கள்கிழமை அதிகாலை அம்பாசமுத்திரம் வனச்சரகம், சிங்கம்பட்டி பீட்-2. பகுதியில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் யானை, பொட்டல் கிராமம் அருகே தனியார் தோட்டத்தில் நுழைந்து அங்கிருந்த பனைமரத்தைச் சாய்த்துள்ளது.

இதில் அருகில் சென்ற உயரழுத்த மின்தடத்தில் பனைமரம் விழுந்ததில் மின்கம்பி அறுந்து யானையின் மேல் விழுந்து மின்சாரம் தாக்கியதில் அந்த இடத்திலேயே யானை உயிரிழந்தது. தகவலறிந்த களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத் துணை இயக்குநர் செண்பகப்ரியா, அம்பாசமுத்திரம் உதவி வனப்பாதுகாவலர் (பயிற்சி) நித்யா, அம்பாசமுத்திரம் காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் உயிரிழந்த யானையை உடற்கூறு செய்து அடக்கம் செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.