
செங்கோட்டை நித்யாகல்யாணி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது.
செங்கோட்டை – இலத்தூர் ரோட்டில் அமைந்துள்ள நித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து தமிழ்நாடு இந்து திருக்கோவில்கள் கூட்டமைப்பு தென்காசி மாவட்டம் சார்பில் மாநில தலைவர் செந்தில்ஜி, மாநில ஒருங்கிணைப்பாளர் டில்லிபாபு, மாநில மகளிரணி செயலாளர் சுகன்யா, இணைச்செயலாளர் ராமு, மண்டலத் தலைவர் மாரியப்பன் ஆகியோர் ஆலோசனையின்படி உலக நன்மை வேண்டி மாதாந்திர பவுர்ணமி பூஜை, மற்றும் திருவிளக்கு பூஜை நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்டத்தலைவர் பொன்னுத்துரை தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் மணிமகேஸ்வரன், மாவட்டப் பொருளாளர் முத்து, துணைப் பொருளாளர் கோபக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி நடராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார். அதனை தொடர்ந்து ஐந்தருவி அன்னை சாரதாதேவி ஆசிரம நிர்வாகி யதீஸ்வரிஆத்மப்ரியா மாதாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் திருவிளக்கினை ஏற்றி வைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி நிர்வாகி ஆனந்தஜோதி, திருவிளக்கு வழிபாட்டு கமிட்டி தலைவர் நித்யா, மாவட்ட கௌவரவத்தலைவர் பிரபாகரன், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் ஆதிமூலம், முத்துசாமி, ரேவதி, பார்கவி, சுப்புலெஷ;மி, நித்யா, மாலா, யுவஸ்ரீ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நித்யகல்யாணி அம்மன், மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம். அலங்காரம், தீபாராதனை நடந்தது. முடிவில் மாவட்ட செய்தி தொடர்பாளர் புளியங்குடி மாரிமுத்து நன்றி கூறினார்.