அக்.31: இன்று வால்மீகி ஜெயந்தி!

Published:

valmiki 1
valmiki 1

மனித இனத்தை அதர்மத்தில் இருந்து தர்மத்திற்கும் அசத்தியத்திலிருந்து சத்தியத்திற்கும் நடத்துவதே வால்மீகி மகரிஷியின் நோக்கம். குடும்ப விழுமியங்களில் இருந்து அரசாட்சி சூத்திரங்கள் வரை மனித தர்மங்கள் அனைத்தையும் ராமாயணத்தில் வால்மீகி அழகாக விவரித்துள்ளார். வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு ஆதி கவியின் கருத்துக்களை எண்ணிப் பார்த்து அதன் படி நடந்து கொள்வோமாக என்று நாட்டின் தலைவர்கள் பலரும் மக்களுக்கு வால்மீகி தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இன்று வால்மீகி ஜெயந்தியை எதற்காக கொண்டாடுகிறோம்? அந்தப் பெயர் எதனால் வந்தது? சற்று பார்ப்போமா?

இந்து காலண்டர்படி வால்மீகி மகரிஷி பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் அஸ்வினி மாதத்தில் பௌர்ணமி அன்று கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி சனிக்கிழமை வால்மீகி ஜெயந்தி கொண்டாடுகிறோம்.

வால்மீகி ஜெயந்தி தொடர்பாக நாடெங்கிலும் சில பிரத்யேக நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக அந்த கொண்டாட்டங்களை நடத்துவதற்கு இடமில்லாமல் போனது.

இதுவரை வால்மீகி பிறப்பு குறித்து தெளிவான ஆதாரங்கள் இல்லை. ஆனால் கஸ்யப மகரிஷி அதிதி தம்பதிகளின் ஒன்பதாவது மகனான வருண் மற்றும் சார்சி தம்பதிகளுக்கு பிறந்தவரே வால்மீகி என்று அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!
valmiki
valmiki

அதோடு கூட வால்மீகி மகரிஷி பற்றிய பல கதைகள் வழக்கத்தில் உள்ளன. புராணங்களின்படி வால்மீகி பிரம்மாவின் அம்சத்தோடு பிறந்தார் என்று சில அறிஞர்கள் கருதுகிறார்கள். வழிப்பறிக் கொள்ளை செய்தும் விலங்குகளை வேட்டையாடியும் பிற கொடூரங்களும் செய்துவந்த வால்மீகி சப்தரிஷிகளின் போதனையால் மகரிஷி ஆக மாறினார் என்றும் ஒரு கதை உள்ளது. தீய சகவாசங்களோடு கிராதகனாக மாறிய ரத்னாகருக்கு நாரதர் ராம நாமத்தை உபதேசித்தார் என்று கூறப்படுகிறது. ராம நாமத்தை ஜெபித்து கடுமையாக தவம் செய்த அவரைச் சுற்றிலும் புற்று ஏற்பட்டது என்றும் அந்த புற்றுகளின் மத்தியில் இருந்து வெளிப்பட்டதால் ரத்னாகர் வால்மீகியாக மாறினார் என்று மற்றொரு கதை உள்ளது.

இந்த பின்னணியில் வேட்டைக்காரனாக இருந்த வால்மீகி ருஷியாகவும் படைப்பாளியாகவும் எவ்வாறு மாறினார் என்ற விவரங்களை சற்றுப் பார்ப்போம்… புராணங்களின்படி வால்மீகி மகரிஷி கடுமையான தவத்தில் மூழ்கி இருந்தார். அப்போது அவருடைய உடல் மீது கிருமிகள் எல்லாம் ஏறி கூடுகட்டி விளையாடின. வால்மீகி மகரிஷி தவம் முழுமையடைந்த பின் அவற்றை தட்டிவிட்டார். அப்படிப்பட்ட நிலையில் வால்மீகி என்றழைக்கப்பட்டார். அப்போது முதல் வால்மீகி ரத்னாகர் என்ற பெயர் ஏற்பட்டது.

ALSO READ:  சோசலிசம் என்னும் கை விலங்கு!

புராணங்களின்படி ஸ்ரீ ராமர் சீதையிடமிருந்து தொலைவாக இருந்த காலத்தில் சீதாதேவி வால்மீகி ஆசிரமத்தில் பல ஆண்டுகள் வசித்து வந்தாள். இங்கேயே சீதாதேவி லவன் குசன் இருவரையும் ஈன்றாள். சீதாதேவியை வனதேவதை என்று அழைப்பதற்கு கூட இதுவே காரணமானது.

valmiki 2
valmiki 2

ஒரு வேட்டைக்காரன் ரத்னாகரைப் பிடித்துக் கொண்டு சென்றுவிட்டான். அதன் காரணமாகவே அவர் வேட்டைக்காரர்கள் இடையே வளர்ந்தார். அவரும் கூட திருடனாக மாறினார். தான் தவறான மார்க்கத்தில் இருப்பதாக அறிந்து கொண்டபோது, மீண்டும் அந்த தவறை செய்யக்கூடாது என்று தீர்மானித்தார். புது மார்க்கத்தை அனுசரிக்க வேண்டும் என்று நிச்சயித்துக் கொண்டார். அந்த சமயத்தில் நாரத மகரிஷியை சந்தித்தபோது ‘ராம’ நாமத்தை ஜெபிக்கும்படியும் அந்த மார்க்கத்தில் செல்லும் படியும் நாரதர் குறிப்பிட்டார். அப்போதிலிருந்து சந்நியாசியாக மாறி தவம் செய்யத் தொடங்கினார். பிரம்மா அவருடைய தவத்திற்கு மெச்சி ஞானத்தை அளித்தார். அது மட்டுமல்ல. அவருக்கு ராமாயணம் எழுதும் சாமர்த்தியத்தையும் அளித்தார்.

அஸ்வினி மாதம் பௌர்ணமி அக்டோபர் 30-ஆம் தேதி மாலை 5.45 மணி முதல் 31ஆம் தேதி காலை 8:18 வரை உள்ளது. இவ்விதமாக அக்டோபர் 31ஆம் தேதி வால்மீகி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img