லோக்பால் நிறைவேற்றாததைக் கண்டித்து ஜன.30ல் போராட்டம்: அன்னா ஹஸாரே அறிவிப்பு

Published:

புது தில்லி:

லோக்பால் மசோதா நிறைவேற்றுவதில் மத்திய  அரசு மெத்தனமாக செயல்படுவதாகக் கூறியுள்ள  அன்னா ஹஸாரே, இதை கண்டித்து ஜன.30ல் தில்லியில் போராட்டம் நடத்தப் போவதாகக் கூறியுள்ளார்.

தன் சொந்த கிராமமான ராலேகான் ஸித்தியில் அன்னா ஹஸாரே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:  

லஞ்ச, ஊழலைத் தடுக்க வகை செய்யும் லோக்பால் மசோதா விவகாரத்தில் போராட்டம் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஏற்கெனவே நான்  7 மாநிலங்களைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களைச் சந்தித்து பேசியுள்ளேன்.  லோக்பால் மசோதா நிறைவேற்றும் விவகாரத்தில், மத்திய அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து வருகிற ஜன.30 ஆம் தேதி தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தவுள்ளளேன்.
 
இந்த மசோதாவை பொறுத்தவரையில், அரசின் தாமதப்படுத்தும் தந்திரம், அதன் நோக்கம் மற்றும் நம்பகத்தன்மை மீது கேள்வி எழுந்துள்ளது. அரசியலில் நடுநிலை வகிக்கும் சமூக ஆர்வலர்கள், தில்லியில் நடைபெறும் அமைதி போராட்டத்தில் கலந்து கொள்ளலாம். இதற்கு நான் தார்மீக ஆதரவு தெரிவிக்கிறேன்.
 
ஆரம்பத்தில் தில்லி ஆம் ஆத்மி அரசால் முன்மொழியப்பட்ட லோக்பால் மசோதா, பலவீனமாக இருந்தது. என்னுடைய குறுக்கீட்டைத் தொடர்ந்து, அந்த மசோதா வலுவானதாக மாற்றப்பட்டது.
 
நான் பரிந்துரைத்த 4 உட்பிரிவுகளும் அத்துடன் இணைக்கப்பட்டன. இந்த தொடக்கத்தை நாம் வரவேற்க வேண்டும். மசோதா நிறைவேறும் சமயத்தில், அதில் தேவையான மாற்றங்களை கொண்டுவர வேண்டும்.
 
கேஜ்ரிவால் ஒரு முதலமைச்சராக அவர் எந்தவொரு தவறான முடிவையும் எடுத்ததை நான் பார்த்தது இல்லை. அரசியல் மீதான சாமானிய மனிதனின் எண்ணத்தை அவர் மாற்றிக் காட்டிவிட்டார்.
 
பணபலத்தில் இருந்து அரசியல் விடுபட்டிருப்பதை பார்க்க நான் விரும்புகிறேன். அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மரியாதை இல்லை என்பதை என்னால் ஏற்க முடியாது.
 
சத்தியாகிரகத்தை மேற்கொள்வது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு முரணானது அல்ல. அமைப்பு முறைகளை மாற்றுவதற்காக நக்சலைட்டுகளை போல், வன்முறையை கேஜ்ரிவால் தூண்டியதில்லை” என்று கூறினார்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

Related articles

Recent articles

spot_img