IMG 20230102 WA0085 - 2026

விருதுநகரில் கோயில் விழாவுக்காக வந்த யானைக்கு உடல் நலக்குறைவு..

உள்ளூர் செய்திகள்
IMG 20230102 WA0085 - 2026

விருதுநகரில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வுக்கு வந்த யானைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.உடனடியாக
கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

விருதுநகர் உள்ள தனியாருக்கு பாத்தியப்பட்ட
இருவேறு கோயிலில்
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி க்கு இரண்டு யானைகள் வரவழைக்கப்பட்டன.
ஒரு கோவிலுக்கு(ரங்கநாதர் கோவில்) மதுரையிலிருந்து மாதவி என்ற யானையும்
மற்றொரு கோவிலுக்கு (ராமர் கோவில்)
ராஜபாளையத்தில் இருந்து லலிதா என்ற யானையும் கொண்டுவரப்பட்டது
ராஜபாளையத்தில் இருந்து
கொண்டுவரப்பட்ட
லலிதா என்ற 57 வயது யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு விருதுநகர் மதுரை சாலையில் தனியார் இடத்தில் வைத்து யானைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் முகமது ஷேக். இவர் லலிதா (56) என்ற யானையை பராமரித்து வருகிறார்.

இந்த யானையை விருதுநகர் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள ராமர் கோயிலில்
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி க்காக ஏற்பாடு செய்திருந்தனர்.
ராஜபாளையத்தில் இருந்து விருதுநகர் கொண்டு வரப்பட்ட யானை லலிதாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

யானை உடல்நலம் பாதிக்கப்பட்டதால் விருதுநகர் மதுரை சாலையில் தனியார் இடத்தில் வைத்து யானைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனால்
விருதுநகரில் மற்றொரு(ரங்கநாதர் கோவில்) சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வுக்கு வந்த யானை மாதவியை வைத்து மற்றொரு(ராமர்) கோவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.