918641 - 2026

விடியல் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை -இபிஎஸ்..

அரசியல்
918641 - 2026

திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகி உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பவிதில் கூறியிருப்பதாவது:- திமுகவின் பொதுக் கூட்டத்தில் பெண் காவலர்களை பாலியல் ரீதீயாக துன்புறுத்திய திமுக நிர்வாகிகள், பாதுகாப்பு தருபவர்களையே தன் கட்சியினரிடம் இருந்து பாதுகாக்க முடியாத, காவல்துறையையின் பொறுப்பாளராக இருக்ககூடிய இந்த கையாளாகாத முதல்-அமைச்சருக்கு எனது கடுமையான கண்டனங்கள்.

இது போன்ற தொடர் சம்பவங்கள் , இவரது திமுக ஆட்சியில் சாமானிய பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியிருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது, நம்மை காக்கும் பெண்களை நாமே காக்க வேண்டிய சூழ்நிலை. உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து,கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.