வெள்ளப் பெருக்கு! குற்றால அருவிகளில் குளிக்க தடை!

Published:

courtallamfivefalls - 2026திருக்குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அருவிகளில் குளிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது.

குற்றால மலைப் பகுதிகளில் நேற்று இரவு முதலே மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் அருவிக்கு நேற்று நள்ளிரவு முதலே நீர் வரத்து அதிகரித்துக் காணப் பட்டது.

நேற்று மாலை மிதமாக தண்ணீர் விழுந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்து குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் இன்று காலை முதல், ஐந்தருவி, குற்றாலம் மெயினருவி உள்ளிட்ட அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துக் காணப் பட்டது.

courtallamjuly19a - 2026மெயினருவியில் ஆர்ச்சைத் தாண்டி நீர் விழுந்தது. இதனால் சுற்றுலா பயணிகளை போலீஸார் அனுமதிக்கவில்லை.

சீஸன் தொடங்கிய ஜூன் முதல்வார இரு நாட்களுக்குப் பின்னர், தற்போதுதான் சீஸன் களைகட்டியிருக்கிறது குறிப்பிடத் தக்கது.

Related articles

Recent articles

spot_img