“போலி சந்நியாஸிகள்” (பூஜ்யர்)
(“பூஜ்யர் என்றாலே சூன்யர் என்றும் அர்த்தம்தானே”)
.
ரா,கணபதி எழுதியது
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
மஹா பூஜ்யர் என்று சொல்லப்பட்ட ஒரு நவீன கால ஸ்வாமிஜியை நாடிப்போய்
ஏமாந்து திரும்பிய ஓர் அடியார் பெரியவாளிடம் தம் தாபத்தைக் கொட்டிக் கொண்டிருந்தார்.
“பூஜ்யருமில்லை; ஒன்றுமில்லை,ஞான சூன்யந்தான் என்று கொஞ்ச நாளிலேயே
தெரிந்து விட்டது” என்றார்.
பெரியவாளின் கண்களில்,இதழில் குறுகுறு ஒளி!
“பூஜ்யர் என்றாலே சூன்யர் என்றும் அர்த்தம்தானே” என்று ஒரு புதிரைப் போட்டுவிட்டு, பிறகு
“பூஜ்யம் என்றால் ஸைஃபர் இல்லையா?”
என்றாரே பார்க்கலாம்!
என்றாரே பார்க்கலாம்!


