‘பூமராங்’ ஆன டிசர்ட் அரசியல்! மீண்டும் கிளம்பிய ‘மூல’ பிரச்னை! திணறும் முதலாளிகள் கம்பெனி!

அடடே... அப்படியா? லைஃப் ஸ்டைல்
thada-periyasamy
thada-periyasamy

திமுக தொடங்கிய டீசர்ட் அரசியல் அதற்கே  பூமராங் என திரும்பியிருக்கிறது. 

அண்மையில் திமுக எம்பி கனிமொழி விமான நிலையத்தில் தன்னிடம் மத்திய தொழில் பாதுகாப்பு படைப் பிரிவை சேர்ந்த அதிகாரி ஹிந்தி தெரியாது என்றால் நீங்கள் ஒரு இந்தியர் என்று கேட்டதாக சர்ச்சை ஒன்றை கிளப்பினார் அதன்பிறகு இந்தி தெரியாத தமிழர் என்ற அரசியலை திமுக கையில் எடுத்தது

 கடந்த வருடம் திமுக அலுவலக முரசொலி அமைந்துள்ள கட்டிடம் குறித்து பிரச்சனை எழுந்தது பஞ்சமி நிலம் குறித்த விவகாரத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஒரு கருத்தை தெரிவிக்க திமுக தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் இடமே  பஞ்சமி நிலத்தில் அமைந்ததுதான் என்று அரசியல் ரீதியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன

 இதைத்தொடர்ந்து திமுகவை நோக்கி மூலப்பத்திரம் எங்கே என்ற ட்விட்டர் பதிவுகள் கேள்விக் கணைகள் அதிகம் தொடுக்கப்பட்டன ஆனால் அதற்கு உரிய பதிலை திமுக வழங்கவில்லை நீதிமன்றத்தில் வழக்குகள்   தற்போதைய அதிமுக  தலைமையிலான அரசின் உதவியுடன் நீட்டிக்கப்பட்டு வந்திருக்கின்றது எனவே திமுகவுக்காக தற்போதைய தமிழக அரசு வேலை செய்கிறது என்று கருத்துகள் முன்வைக்கப்பட்டன

 இந்நிலையில் தற்போது டீசர்ட் அரசியல் திமுகவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது இந்தி தெரியாது போடா என்று திமுக எம்பி கனிமொழி தொடங்கிவைத்த இந்த அரசியல் இப்போது மீண்டும் திமுகவினருக்கு பூமராங் போல் திரும்பியுள்ளது

ALSO READ:  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திமுக வேண்டாம் போடா என்று எதிர் தரப்பினரால் டி ஷர்ட் அரசியல் இப்போது பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது அதன் இன்னொரு பகுதியாக பாஜகவை சேர்ந்த தடா பெரியசாமி கடந்த வருடத்தில் பெரிதும் எழுப்பப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட மூலப்பத்திரம் எங்கே என்ற அரசியலை இப்போது மீண்டும் கிளறி இருக்கிறார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.