பாடாய் படுத்திய ஈ.. பேட்டால் துரத்த நினைத்த முதியவர்! வீடு எரிந்த பரிதாபம்!

Published:

Mosquito-Bat

ஈ அடிப்பதற்காக எலக்ட்ரானிக் பேட் பயன்படுத்தியபோது சமையலறை முழுவதும் எரிந்து சேதமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

82 வயதான நபர் ஒருவர் இரவு உணவை சாப்பிடும்போது ஒரு ஈ அவரை மிகவும் எரிச்சலாக்கியது. அந்த ஈ-ஐ கொல்வதற்கான முயற்சியில் அவர் இறங்கியபோது சமையலறை முழுவதும் சேதமடைந்துள்ளது.

பிரான்சில் பார்கோல்-செனாட் என்ற சிறிய கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த நபர் இரவு உணவு சாப்பிடும்போது ஒரு ஈ அவரை சுற்றிவரத்தொடங்கியது. ஈயைக் கொல்வதற்காக, அந்த நபர் மின்சார பேட் ஒன்றை பயன்படுத்தியுள்ளார். அதே சமயத்தில், அவரது வீட்டில் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது.

E

ஆனால், அதனை அவர் உணரவில்லை. மின்சார பேட்டில் இடுந்து வந்த மின்சாரம் வாயுவிடம் தொடர்புகொண்டபோது வெடிப்பு ஏற்பட்டது. வெடிப்பு காரணமாக, அவரது சமையலறை முற்றிலுமாக சேதமடைந்தது மட்டுமல்லாமல், வீட்டின் மேற்கூரையும் சேதமடைந்துள்ளது.

ஆனால், அந்த நபருக்கு பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. அவரது கையில் தீக்காயம் மட்டுமே இருந்தது. அதனைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அந்த நபருடைய வீடு வசிப்பதற்கு தகுந்ததாக இல்லை என்பதால் அவர் ஒரு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

ALSO READ:  FIFA 2026: ரவுண்ட் 16... கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

ஒரு ஈ -ஐ அடிப்பதற்கான விளைவாக வீட்டின் சமையலறை மற்றும் மேற்கூரை சேதமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது,

Related articles

Recent articles

spot_img