IMG 20230119 WA0066 - 2026

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து- ஒருவர் பலி ஒருவர் படுகாயம்..

சற்றுமுன்
IMG 20230119 WA0066 - 2026
IMG 20230119 WA0063 - 2026
பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்த ரவி

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பட்டாசு தொழிலாளி ஒருவர் பலி யானார்.ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி அருகே செங்கமலபட்டியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான தனியார் பட்டாசு செயல்பட்டு வருகிறது. 140 தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் இந்த ஆலையில் பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ரசாயன மூலப் பொருட்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் திருத்தங்கல்லை சேர்ந்த ரவி என்ற பட்டாசு தொழிலாளி உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சாமுவேல் ஜெயராஜ் என்ற தொழிலாளி படுகாயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் பட்டாசு தயாரிக்கும் ஒரு அறை தரைமட்டமானது.

IMG 20230119 WA0065 - 2026

விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பட்டாசு ஆலைகளில் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வரும் நிலையில் விபத்தை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

IMG 20230119 WA0064 - 2026
பட்டாசு ஆலை வெடி விபத்தில் படுகாயமடைந்த சாமூவேல்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.