அமெரிக்காவை சேர்ந்த பிரபல கேக் தயாரிப்பாளர் ஒருவர் மஞ்சள் நிற மலைப்பாம்பினை கேக் வடிவில் தயாரித்து அதனை வெட்டியுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல கேக் தயாரிப்பாளர் நடாலி சைட்செர்ப். இவர் பூச்சிகள் , விலங்கினங்கள் , மனித உருவம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் கேக் தயாரித்து வருகிறார்.
இந்த கேக்குகள் பார்ப்பதற்கு அப்படியே தத்ரூபமாக இருப்பதால் மக்களை கவர்ந்து வருகிறது. தனது கேக் தயாரிப்புகளை நடாலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
மேலும் இவர் Sideserf Cake Studio என்ற பெயரில் யூடியூப் பக்கத்தையும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நடாலி சைட்செர்ப், பாம்பு வடிவில் கேக் ஒன்றை தயாரித்துள்ளார். அந்த வீடியோவில் பாம்பு வடிவ கேக்கினை எவ்விதம் செய்தோம் என வீடியோவும் வெளியிட்டுள்ளார்.
அதில் கேக்கினை கத்தியை கொண்டு வெட்டும் போது பாம்பு இரு துண்டுகளாக பிரிகின்றது.
பலரும் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். பாம்பு மட்டும் அல்லது பிற உயிரினங்களையும் அவர் தனது இணையதள பக்கத்தில் வீடியோவாக செய்து வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர். பலரும் திறமைக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
பாம்பு மட்டும் அல்லாது பிற பூச்சிகளையும் கேக் போல் செய்து அசத்தியுள்ளார்