images 2023 02 28T093016.662 - 2026

பிரதமர் மோடியின் சகோதரர் சென்னை மருத்துவமனையில் அனுமதி..

சென்னை
images 2023 02 28T093016.662 - 2026

பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் தாமோதரதாஸ் மோடி. இவருக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இவர் இந்தியா முழுக்க ஆன்மிக சுற்றுப் பயணம் செய்துவருகிறார்.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட கோவில்களும் குடும்பத்துடன் சென்றுவந்துள்ளார். தற்போது ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் இவருக்கு சிறுநீரக பிரச்சினை காரணமாக திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஏறகனவே 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சாலை மார்க்கமாக பிரகலாத் மைசூருவில் பயணித்த போது, விபத்தில் சிக்கினார். தொடர்ந்து அவருக்கு மருத்துவனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.