கொள்ளையடித்த பணத்தில் தினகரன் வெற்றி: திமுக தீர்மானம்

சற்றுமுன் சென்னை தமிழகம்

சென்னை: தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக உயர்நிலை செயல் திட்டக்குழுவில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

2ஜி-ல் பல லட்சம் இழப்பு என்று தொடரப்பட்ட வழக்கு பொய்யானது.

ஆர்.கே.நகர் தேர்தலில் மக்களிடம் கொள்ளை அடித்த பணத்தை பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர்.

ஆர்.கே.நகரில் பணியாற்ற தவறியவர்கள் மீது நடவடிக்கை என தீர்மானம் நிறைவேறியது.

பெரும்பான்மையை இழந்துவிட்ட அ.தி.மு.க. அரசு பதவி விலக வேண்டும்… என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இனியும் அ.தி.மு.க. அரசு பதவியில் தொடருவது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்று திமுகவின் உயர் மட்ட செயல் திட்டக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.