கனவுலகில் இருக்கிறார் தினகரன்: பன்னீர்செல்வம் பதில்

Published:

கனவு உலகத்தில் இருந்து கொண்டு பேசுபவர்களுக்கு பதில் சொல்ல முடியாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்ற டிடிவி தினகரன் கருத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்னதாக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது எங்களது ஸ்லீப்பர் செல்கள் வெளிவருவார்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார். 18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கப்பட்டது செல்லாது என்று ஜனவரி இறுதிக்குள் தீர்ப்பு வரும் என்று டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆடிட்டர் குருமூர்த்திக்கும் அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி எழுப்பிய தினகரன், அதிமுக விலுள்ள 5, 6 பேரின் கூடா நட்பு கேடாய் முடிந்து விட்டதாகவும் கூறினார்.

Related articles

Recent articles

spot_img