தஞ்சை பெரிய கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..

Published:

puthiyathalaimurai 2023 05 7d32f805 e215 4539 8af8 07484b45d618 WhatsApp Image 2023 05 01 at 12 17 33 PM - 2026
#தஞ்சை பெரிய கோவிலில் தேரோட்டம் இன்று

சித்திரை திருவிழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.சுவாமி தரிசனம் செய்தனர்.

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை விழா கடந்த 17 ஆம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு காலை –  மாலை என இருவேளைகளும் சாமி புறப்பாடு நடைபெற்றது. 

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் திங்கள்கிழமை வெகு சிறப்பாக தொடங்கி நடைபெற்றது. 

முன்னதாக தேரில் எழுந்தருளிய தியாகராஜர் மற்றும் கமலாம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

பின்னர், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாநகர மேயர் ராமநாதன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.  

இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

தேருக்கு முன்னதாக விநாயகர், சண்டிகேஸ்வரர் சப்பரத்தில் எழுந்தருளியுள்ளனர்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

ராஜ வீதிகளில் 14 நிலைகளில் பக்தர்கள் பூஜை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மேலும், பாதுகாப்புப் பணியில் 400-க்கும்  மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டனர். 

தீயணைப்புத்துறை – சுகாதாரத் துறையினர்  தயார் நிலையில் உள்ளனர். மேலும், தேரோட்டத்தை முன்னிட்டு நான்கு ராஜ வீதிகளும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மேலும் அப்பகுதியில் மின்சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img