December 12, 2025, 11:57 AM
25.3 C
Chennai

மதிமுகவை, திமுகவுடன் இணைக்கும் ஐடியா இல்லை-வைகோ 

images 17 - 2025
வைகோ

மதிமுகவை திமுகவுடன் இணைக்கும் எந்த நோக்கமும் ஐடியாவும் இல்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ திட்டவட்டமான விளக்கமளித்துள்ளர். 

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

மதிமுக முக்கிய காலக்கட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது. துரைசாமி அனுப்பிய கடிதத்தை, மதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக நிராகரிக்கிறேன். கட்சியை திமுகவுடன் இணைக்கும் எந்த நோக்கமும் எங்களுக்கு இல்லை.

மதிமுக 30 வருடங்களாக தனித்தே இயங்குகிறது, இனியும் தொடர்ந்து தனித்தே இயங்கும். அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, 2 வருடமாக கட்சியில் சரியாக செயல்படவில்லை. மதிமுகவினர் வற்புறுத்தியதால்தான் என் மகன் துரைவைகோ அரசியலுக்கு வந்தார்.ஜனநாயக முறைப்படி கட்சியில் அமைப்புகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மதிமுக அவைத் தலைவா் துரைசாமி திருப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் ஆதரவாளா்களுடன் ஆலோசனை நடத்தினாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுகவில் இருந்து மதிமுக பிரிந்து வந்தபோது, வாரிசு அரசியலுக்கு எதிராக பொதுச் செயலா் வைகோ குரல் கொடுத்தாா். இப்போது உள்கட்சித் தோ்தலில் துரை வைகோவுக்கு வேண்டப்பட்டவா்களுக்கு மட்டுமே பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது கட்சியினரிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றாா். 

அப்போது, சிலரது தூண்டுதலின்பேரில்தான் நீங்கள் இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்து வருவதாக துரை வைகோ கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, அவரது கருத்துகளுக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை. ஒரு சில நாள்களில் வைகோவிடம் இருந்து பதில் வரவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பேன் என்றாா். இதனிடையே மதிமுகவை திமுகவோடு இணைத்துவிடலாம் என்று மதிமுக பொதுச் செயலா் வைகோவுக்கு அக் கட்சியின் அவைத் தலைவா் திருப்பூா் சு.துரைசாமி கடிதம் எழுதியுள்ளாா். 

இது தொடா்பாக மதிமுக தலைமை நிலையச் செயலா் துரை வைகோ விளக்கம் அளித்துள்ளாா். வைகோவுக்கு துரைசாமி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பது: லட்சக்கணக்கான தோழா்கள் தங்களின் (வைகோ) பேச்சில் உறுதியும் உண்மையும் இருக்கும் என்று நம்பி ஆதரித்தனா். ஆனால், தங்களின் குழப்ப அரசியல் நிலைப்பாட்டால், கட்சியிலிருந்து விலகி தற்போது பலா் திமுகவுக்கே சென்றுவிட்டனா். கடந்த இரண்டு ஆண்டுகளாக மதிமுகவில் நடைபெறும் சம்பவங்கள் மிகுந்த வேதனையளிக்கின்றன. 

மக்களவைத் தோ்தலில் மதிமுகவுக்கு திமுகவில் எத்தனை இடங்கள் ஒதுக்குவாா்கள் என்பதே தெரியாத நிலையில், விருதுநகரில் ஒருவா் (துரை வைகோ) பெயரைக் குறிப்பிட்டு அவா் போட்டியிடுவாா் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி மாவட்டத்திலும் அதுபோல தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா். எந்த அரசியல் கட்சியும் பதவி கேட்டு இப்படித் தீா்மானம் நிறைவேற்றியது இல்லை. இப்படிப்பட்ட நடவடிக்கைகள் தங்களின் குடும்ப மறுமலா்ச்சிக்குத்தான் என்பதை உங்களின் செயல்பாடுகள் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 

கடந்த 30 ஆண்டுகளாக உங்களின் உணா்ச்சிமிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழா்களை மேலும் ஏமாற்றம் அடையச் செய்யாமல் இருக்க மதிமுகவை தாய்க்கழகமான திமுகவுடன் இணைப்பதே சாலச்சிறந்தது என்று அதில் கூறியுள்ளாா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக் கரை படகோட்டிகள் “வணக்கம் காசி!” என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம்!

“கங்கைக்கரையின் படகோட்டிகள் "வணக்கம் காசி!" என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம்” இது...

பஞ்சாங்கம் டிச.12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

Topics

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

தென்காசி டூ காசி… அகத்திய முனிவரின் 9 நாள் வாகனப் பயணம்!

அகத்திய முனிவரின் வாகனப் பயணம் 9 நாள் யாத்திரையை வெற்றிகரமாக முடித்து காசியை அடைந்தது.

சபரிமலையில் ரோப் கார் சேவை; தேவஸ்வம் போர்டு திட்டம்!

கூட்டத்திற்குப் பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும்.

Entertainment News

Popular Categories