பெரியார் சிலை மீது கைவைத்து பார்க்கட்டும்: சுப.வீரபாண்டியன் ஆவேசம்

இந்தியா தமிழகம்

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று காலை திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது குறித்து குறிப்பிடும்போது, ‘லெனின் யார், அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு, கம்யூனிசத்தின்கும் இன்று திரிபூராவில் லெனின் சிலை
நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை’ என்று தெரிவித்திருந்தார். சர்ச்சைக்குரிய இந்த கருத்தால் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கொந்தளித்தனர்.

இந்த நிலையில் பாஜகவை அவ்வபோது கடுமையாக விமர்சனம் செய்து வரும் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், இதுகுறித்து கூறியபோது ‘நாளை என்ன நாளை, வீராதி வீரர்கள் இன்றே பெரியார் சிலை மீது கைவைத்து பார்க்கட்டும்’ என்று எச்.ராஜாவுக்கு நேரடியாக சவால் விடுத்துள்ளார்.

எச்.ராஜா இப்போதுவரை இந்த சவாலுக்கு எந்தவித எதிர்க்கருத்தையும் தெரிவிக்காமல் உள்ளார். எச்.ராஜாவின் இந்த கருத்து குறித்து பாஜக தலைவர்களே எவ்வித கருத்துக்களையும் கூறாமல் மெளனம் காத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.