முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் தாயார் நேற்றிரவு காலமானார்.
முன்னாள் அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஐ. பெரியசாமியின் தாயார் அலமேலு அம்மாள் (94) நேற்றிரவு காலமானார். இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் வத்லக்குண்டுவில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. காலமான அலுமேலு அம்மாள் பழநி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமாரின் பாட்டியும் ஆவார்.



