சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அப்போது தமிழக அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பவே அரசியலுக்கு வருவதாக கூறினார்.
அதற்கு பாராளுமன்ற துணை சபாநாயகரும், அ.தி.மு.க. எம்.பி.யுமான தம்பிதுரை பதில் அளித்துள்ளார். உலகில் வெற்றிடம் எதுவும் இல்லை. பரலோகத்தில்தான் வெற்றிடம் உள்ளது என்றார்.



