அடுத்த இரு நாட்களுக்கு காற்றழுத்தத் தாழ்வு நிலை; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் நெல்லை மதுரை

pamban Rail and Road bridges Rameswaram - 2026

நாகர்கோயில்:

கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

காற்றழுத்தத் தாழ்வு நிலையால், அடுத்த 24 மணி நேரத்திற்கு சுழல் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக, மீனவர்கள் அடுத்து வரும் இரு நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என அது அறிவுறுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் பகுதியிலும் கடல் சீற்றம் இருக்கும் என்பதால், இதுகுறித்து வருவாய் நிர்வாக ஆணையர் தெரிவித்தபோது, மன்னார் வளைகுடா பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். எனவே அப்பகுதி மீனவர்கள் சனிக்கிழமை நாளை முதல் அடுத்து வரும் இரு நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை செய்யப் படுவதாகக் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.