சென்னை:
முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது, நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம். இந்த ஆணையத்தில் ஜெயலலிதாவுடன் பழகிய, அல்லது நேரடித் தொடர்பு கொண்ட நபர்களுக்கு சம்மன் அனுப்பி, அவர்களிடம் ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்ம முடிச்சுகள் குறித்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் வரும் மார்ச் 12ஆம் தேதி திங்கள் கிழமை ஆஜராக வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், டாக்டர் சிவக்குமார் மார்ச் 14ம் தேதியும், ஐ.ஏ.எஸ்., அதிகாரி வெங்கட்ராமன் மார்ச் 15ம் தேதியும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளது. இவர்கள் மூவரும் ஏற்கெனவே ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். இருப்பினும் மீண்டும் இவர்கள் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.