elephant 4 - 2026

காட்டுக்குள் நுழைந்த இளைஞரை துரத்திய யானை!

இந்தியா அடடே... அப்படியா? சற்றுமுன்
elephant 4 - 2026

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகம் பரந்து விரிந்துள்ளது. இந்த காப்பகத்துடன் கேரளாவின் முத்தங்கா சரணாலயம், கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகம் என 3 காப்பகங்களையும் இணைக்கும் மிகப்பெரிய வனமாக உள்ளது.

முதுமலை காப்பகத்தை பார்வையிடவும், ஊட்டி , மைசூர் செல்லவும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்த வழித்தடத்தையே ஆதாரமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கேரளாவை சேர்ந்த வாலிபர்கள் சிலர் ஒரு காரில் மைசூர் சென்று விட்டு இவ்வழியாக திரும்பிக் கொண்டிருந்தனர். காரை நிறுத்திவிட்டு வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து புகைப்படங்கள் எடுத்தனர்.

அதே நேரத்தில் அருகில் அமைந்துள்ள புதர்களுக்குள் மறைந்திருந்த ஒரு காட்டு யானை ஒன்று காரை நோக்கி வரத் தொடங்கியது. பயந்த இளைஞர்கள் உடனடியாக காரை கிளப்ப முயற்சித்தினர்.

ஆனால் காட்டுயானை அவர்களை விடவில்லை. வனப்பகுதியில் சென்ற வாலிபரை விரட்டத் தொடங்கியது.

அச்சத்தில் உறைய வைக்கும் இந்த காட்சியை அதே வழியில் சென்று கொண்டிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

அவர் யானையிடம் சிக்காமல் கண்ணிமைக்கும் நேரத்தில் காரை நோக்கி ஓடினார். யானையின் தொடர்ந்து ஓடி வந்தது. காரில் ஏறப்போன அவர் கால் இடறி கீழே விழுந்தார். ஒரு வழியாக கீழே விழுந்த வாலிபர் கார் கதவைத் திறந்து உள்ளே ஏறி அமர்ந்தார்.

கார் நகர்ந்ததும் சிறிது நேரத்தில் காட்டு யானையும் அங்கிருந்து சென்றது. காட்டுயானை துரத்த தொடங்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த வனத்துறையினர் வனப் பகுதியில் அத்துமீறி நுழைந்த இளைஞர்களை தேடத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.