கோபாலபுரம் டூ சிஐடி காலனி; கருணாநிதி பயணம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

 

karunanidhi600 - 2026சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி சென்னை கோபாலபுரம் இல்லத்திலிருந்து சி.ஐ.டி., காலனியிலுள்ள கனிமொழி இல்லத்திற்கு சென்றார்.

வெகு நாட்களாக கோபாலபுரம் இல்லத்தில் உடல் நலக் குறைவால் சிகிச்சையில் இருந்து வரும் கருணாநிதி, அவ்வப்போது வெளியில் எங்காவது சென்று தலை காட்டுவது உண்டு. மேலும், தீவிர அரசியலில் இருந்து விலகியுள்ள கருணாநிதியின் இருப்பை தெரிவிக்க அவ்வப்போது, அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள் என்று யாரேனும் சென்று பார்த்து புகைப்படங்களை வெளியிடுவதும், பேரனுடன் கிரிக்கெட் விளையாடுவது பாட்டு கேட்பது என்று புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார்கள்.

முன்னர் அடிக்கடி கோபாலபுரத்தில் இருந்து சிஐடி காலனியில் உள்ள ராசாத்தி அம்மாள் வீட்டுக்குச் செல்லும் கருணாநிதி, அண்மைக் காலமாக உடல் நலக் குறைவால் செல்லவில்லை. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென்று கனிமொழியின் வீட்டுக்கு அவர் சென்றுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.