உள்ளங்கையில் என் உலகம்!

இலக்கியம் கவிதைகள்

hands காலை எழுந்ததும் உன் உள்ளங்கையைப் பார்! ஆன்மிகம் அறிவுறுத்தும்! கையில் லட்சுமி வாசம் செய்வாளாம்! கையின் மத்தியில் வாணி வாசம் செய்வாளாம்! கை மூலைகளில் கௌரி வாசம் செய்வாளாம்! உன் செல்வம்… உன் அறிவு… உன் வீரம்… எல்லாம் உன் கைகளிலே! உனக்குள் குடிகொண்ட மூன்று தேவதைகளையும் உன் உள்ளங்கையில் பார்..! ஆன்மிகம் அறிவுறுத்தும்! சிறு வயது முதலே எனக்கும் பழக்கம்தான்! ஆனால் சமீப காலமாய்… உள்ளங்கை திறந்தால் உனது முகம்! அதிகாலை வேளையில் அழகின் தரிசனம்! லட்சுமி கரமாய் முகப்பொலிவு தகதகக்கும்! சரஸ்வதி வடிவாய் சாத்திரம்  போதிக்கும்! உமையவள் உருக்கொண்டு உதறலை உருக்குலைக்கும்! என் மீது கரிசனம் காட்டும் உன் முக தரிசனம் கண்டு தொடங்கும் ஒவ்வொரு நாளும் எனக்கு வெற்றி நாளே! இப்போதெல்லாம் ஊர் சுற்றப் பிடிக்கவில்லை! வெளி உலகு பிடிக்கவில்லை! என் உள்ளங்கையில் என் உலகமாய் நீ!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.