விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு: வழங்கினார் திருவள்ளூர் எஸ்.பி., அரவிந்தன்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்
sp aravindan - 2026

திருவள்ளூரை அடுத்த வெங்கல் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தார் கோவிந்தசாமி என்பவர். இவருக்கு திருமணமாகி நீலாவதி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி தேர்தல் பறக்கும்படையில் இருந்த வாகனம் விபத்துக்கு உள்ளானது. இதில் பணியில் இருந்த கோவிந்த சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதை அடுத்து, கூட்டு சம்பள திட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகையாக ரூ. 30 லட்சம் வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டது.

அதன்படி, கோவிந்தசாமியின் மனைவி நீலாவதி, மற்றும் அவரது இளைய மகள் லாவண்யா ஆகியோரிடம் அந்த இழப்பீட்டுத் தொகை ரூ. 30 லட்சத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் வழங்கினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.